உள்ளூர் செய்திகள்

மாடுர் கிராமத்தில் அட்மா திட்டம் மூலம் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

சங்கராபுரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி

Published On 2022-07-05 14:05 IST   |   Update On 2022-07-05 14:05:00 IST
சங்கராபுரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாடுர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் அட்மா திட்டம் மூலம் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி தலைமை தாங்கி வேளாண்மை மானியங்கள் குறித்து எடுத்து கூறினார்.

வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி விவசாயிகளை வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் மண்மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை எதவி அலுவலர் அமிர்தலிங்கம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News