உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே பாலிஷ் போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்: மர்ம நபர்கள் ஓட்டம்

Published On 2022-09-22 12:24 IST   |   Update On 2022-09-22 12:24:00 IST
  • நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்தார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி விமலா கிரேசி இவர் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் நாங்கள் நகைகளை பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறோம். எனவே உங்களிடம் நகை இருந்தால் கொடுங்கள் அதனை நாங்கள் புதியது போன்று பாலீஷ் போட்டு தருகிறோம் என விமலா கிரேசியிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்தார்.

அப்போது நகையை பாலீஷ் போடுவது போல் நடித்த அவர்கள் விமலா கிரேசியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு நகையை திருடி தப்பிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News