உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
- இருதரப்பினர் மோதல் ஏற்பட்டது.
- மாட்டை அழைத்து சென்ற போது ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சின்னம்பாளே தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வேடியம்மாள் (வயது40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே மேய்ச்சலுக்கு மாட்டை அழைத்து செல்லும் போது மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குமார், கலைசெல்வி, ேவடி, பெரியபாப்பா ஆகிய 4 பேரும் சேர்ந்து வேடியம்மாளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வேடியம்மாள் போச்சம்பள்ளி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.