உள்ளூர் செய்திகள்

பிடமனேரி அருகே பெண் திடீர் சாவு

Published On 2022-07-01 14:37 IST   |   Update On 2022-07-01 14:37:00 IST
  • குழந்தைகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
  • எதிர்பாராதவிதமாக கவுசல்யா தடுமாறி கீழே விழுந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவுசல்யா(25).

இவர் தனது குழந்தைகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கவுசல்யா தடுமாறி கீழே விழுந்தார். மயங்கி கிடந்த அவரை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவுசல்யா இறந்துவிட்டதாக கூறினர். கவுசல்யா திடீரென இறந்ததால் சந்தேகமடைந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News