உள்ளூர் செய்திகள்

இறையூர் காலனி பகுதியில் புதிய ரேசன் கடை கட்ட அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி வைத்து பேசினார்.

திட்டக்குடி அருகே ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினார்

Published On 2022-07-18 08:26 GMT   |   Update On 2022-07-18 08:26 GMT
  • திட்டக்குடி அருகே ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
  • ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இறையூர் கிராமத்தில் உள்ள காலனி மக்கள் அரிசி கோதுமை பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரேசன் கடைக்கு சென்று வருவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் நாங்கள் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடிவதில்லை எனவே எங்கள் பகுதியில் புதிய ரேசன் கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து இறையூர் காலனி பகுதியில் சுமார் ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது விரைவில் கட்டிடம் கட்டப்பட்டு புதிய பகுதி நேர ரேசன் கடை விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News