உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே இரு தரப்பினர் மோதல்

Published On 2023-02-22 12:49 IST   |   Update On 2023-02-22 12:49:00 IST
  • நிதி நிறுவன அதிபரின் தரப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தில் சுத்தம் செய்வதற்கு சென்றுள்ளனர்.
  • காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரமாக ஆஜராகும் படி போலீசார் அறிவித்துள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார்(49) தனது விவசாய நிலத்தை கரூரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியம் என்பவரிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையில் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நிதி நிறுவன அதிபரின் தரப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தில் சுத்தம் செய்வதற்கு சென்றுள்ளனர்.

இதனை மற்றொரு தரப்பினர் எதிர்த்து கேட்டபோது வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பல்லடம் துணை போலீஸ் சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரையும் சந்தித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தகராறில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர்.

மேலும் இரண்டு தரப்பினரையும் பல்லடம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரமாக ஆஜராகும் படி போலீசார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News