உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளி அருகே வெள்ளக்கல் முதல் ஈசல்பட்டி வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி -மழையை பொருட்படுத்தாமல் தொடங்கி வைத்த .எம்.எல்.ஏ.

Published On 2022-11-12 09:40 GMT   |   Update On 2022-11-12 09:40 GMT
  • சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
  • இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கல் பகுதியில் இருந்து ஈசல்பட்டி வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் நீள சாலை உள்ளது.

இச்சாலை வழியாக அதிக அளவில் சரக்கு வாகனங்களும் பள்ளி கல்லூரி பேருந்துகள் மற்றும் விவசாய பொருட்கள் சந்தை படுத்துவதற்காக காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதால் குறுகிய சாலையாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் செல்வதற்கு ஏதுவாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதனை அடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஏழு கிலோமீட்டர் நீள முள்ள இச்சாலையை சுமார் 8 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்காக பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைப்பதற்காக வந்த பொழுது கனமழை பெய்தது.

அப்பொழுது மழையை யும் பொருட்படுத்தாமல் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அனைவரும் ஒன்றிணைந்து சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். அங்கு கூடி இருந்த பொதுமக்கள் அனை வருக்கும் இனிப்புகளை வழங்கினர்.

இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், தாதநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனி அறிவு, ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News