உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட பெருமாள் கோவிலை படத்தில் காணலாம்.
மத்தூர் அருகே கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
- ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொத்தகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். எனவே, சுற்று வட்டார கிராம மக்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று காலை கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கோவிலின்