உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
- ம த்தூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் சிக்கினார்.
- அவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மனைவி மாலா (வயது 35). மாலாவிடம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மேகநாதன் (வயது 23) என்ற இளைஞர் நேற்று ஈச்சங்காடு பகுதிக்கு சென்று உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் , ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து மாலா மத்தூர் காவல் நிலையத்தில் இளைஞர் மேகநாதன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் இளைஞர் மேகநாதன் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ததுடன் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.