உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே குடும்பத்தகராறில் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை
- குடும்ப தகராறில் உயிரை மாய்த்த பரிதாபம்.
- திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள மாமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பிரியா (வயது 25).
இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இதேபோல ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பிரியா அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.