உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர்
- பல்வேறு இடங்களில் விசாரித்தும் அர்ச்சனா குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.
- இது குறித்து சங்கர் சாமல்பட்டி போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த சாமல்பட்டி வடகனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அர்ச்சனா (வயது 19).
நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அர்ச்சனா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அர்ச்சனா குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சங்கர் சாமல்பட்டி போலீசில் புகார் செய்தார் .அந்த புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 26) என்ற வாலிபர்தான் கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அர்ச்சனாவையும், கடத்தி சென்றதாக கூறப்படும் சதீசையும் தேடி வருகின்றனர்.