உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மாணவர் உள்பட 2 பேர் மாயம்
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் காணவில்லை.
- போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவசெந்தில்குமார். இவரது மகன் தினேஷ்குமார்(19). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 12-ந்தேதி முதல் தினேஷ்குமாரை காணவில்லை பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் ஓசூர் சிப்காட் போலீசில் தினேஷ் குமாரின் தாய் உஷா புகார் செய்தார். புகாரின் பேரில் ஓசூர் சிப்காட்போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமாரை தேடி வருகின்றனர்.
இதேபோல ராயக்கோட்டை அருகேயுள்ள பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் பாலாஜி என்ற 10-ம் வகுப்பு மாணவன் கடந்த 11-ந்தேதி முதல் மா யமாகிவிட்டான் இதுகுறித்து பாலாஜியின் தாய் கவிதா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை தேடி வருகின்றனர்.