உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே முன்விரோதத்தால் 2 வாலிபர்களை தாக்கிய ராணுவ வீரர் கைது
- கிருஷ்ணகிரி அருகே 2 பேரை தாக்கியவர் கைதானார்.
- அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள கருக்கஞ்சவடி பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 39). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் எதிரொலியாக நீலமேகம் ராஜாவை தாக்கியுள்ளார்.
இதை தடுக்க வந்த ராஜாவின் நண்பர் குப்புசாமி என்பவரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த 2 பெரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜா தந்த புகாரின் பேரில் காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து நீளமேகத்தை கைது செய்தனர்.