உள்ளூர் செய்திகள்
கெலமங்கலம் அருகே விவசாயி பைக்கை திருடி வாலிபர் கைது
- வீட்டின் முன் பைக்கை நிறுத்திய பைக் திருட்டு.
- பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த தட்டசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் வயது (40.) விவசாயம் செய்து வருகிறார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து குமார் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தட்டச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் ராமச்சந்திரன்(25) என்பவர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.