சாலை அமைக்கும் பணியினை முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
காவேரிப்பட்டினம் அருகே சாலை அமைக்கும் பணிகள்
- ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டம் சார்பில் சாப்பரத்தி ஊராட்சி செல்லானூர் முதல் பனக்க முட்டலுவரை ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், தொழிலதிபர் சீனிவாசன், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், செந்தாமரை தமிழரசன், காவேரி, ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி சரவணன், பையூர் இளங்கோ, செல்வம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதி சவுந்தர்ராஜன், சக்திவேல், குமரன், சிவராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.