உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் அருகே கிரானைட் கற்கள் கடத்தியவர் கைது

Published On 2022-11-10 14:48 IST   |   Update On 2022-11-10 14:48:00 IST
  • காளி கோவில் முன்பாக கனிம வளத்துறை அதிகாரி பொன்னுசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • அனுமதியின்றி லாரியில் கிரானைட் கடத்தி வந்த ஜெய சாம்ராஜ்குமார்(வயது 45) என்பவரை பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள தாசரிப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளி கோவில் முன்பாக கனிம வளத்துறை அதிகாரி பொன்னுசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு அனுமதியின்றி லாரியில் கிரானைட் கடத்தி வந்த ஜெய சாம்ராஜ்குமார்(வயது 45) என்பவரை பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த கடத்தலில் தொடர்புடைய கமலநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News