உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்கும் காட்சியை படத்தில் காணலாம்.
கடத்தூர் அருகே விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
- கால் தவறி மாடு கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
- கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை சுமார் ஒருமணி நேரம் போராடி மீட்டனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். விவசாயியான இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கால் தவறி மாடு கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வமணி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை சுமார் ஒருமணி நேரம் போராடி மீட்டனர்.
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாட்டை பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.