உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை
- ஓசூர் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்தது.
- ரூ.1.8 லட்சம் நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் வசித்து வருபவர் கணபதி சுப்பிரமணியம் (53), இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணி செய்து வருகிறார்.
இவரது வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவை திறந்து அதில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1,80,000/- ஆகும். இது குறித்து கணபதி சுப்பிரமணியம், ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.