உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே டிப்ளமோ மாணவர் தூக்கு போட்டு சாவு
- மூச்சிரைப்பு நோயால் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
- வீட்டில் தூக்குபோட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பத்தனப்பள்ளி வி .கே.ஆர் . நகரை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது 18). டிப்ளமோ படித்து வந்த முஹம்மது சித்திக் சமீப காலமாக மூச்சிரைப்பு நோயால் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதில் மனமுடைந்த அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.