உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே மரத்தில் பைக் மோதி தொழிலாளி சாவு
- மழை பெய்ததால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின்மீது பைக் மோதியது.
- வீட்டுக்கு திரும்பிய போது நேர்ந்த பரிதாபம்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டன பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 21). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வேலையை முடித்து விட்டு தனது மோட்டார்சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
சின்னேபள்ளி பகுதியில் அவர் வந்த போது மழை பெய்துள்ளது. இதனால் கோவிந்தராஜ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதிவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்து கிடந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.