உள்ளூர் செய்திகள்
சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
சூளகிரி அருகே திம்மராய சுவாமி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
- கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- இங்கு சனிக்கிழமை தோறும் சுற்றுவட்டார கிராமமான பொனல் நத்தம், காளிங்காவரம், வேப்பனப் பள்ளி, வேம்பள்ளி, பேரிகை, அத்திமுகம் பகுதியில் இருந்து வந்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பஸ்தலபள்ளி ஊராட்சியில் 100 ஆண்டு பழைமையானஸ்ரீ திம்மராய சுவாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு சனிக்கிழமை தோறும் சுற்றுவட்டார கிராமமான பொனல் நத்தம், காளிங்காவரம், வேப்பனப் பள்ளி, வேம்பள்ளி, பேரிகை, அத்திமுகம், பிஸ்திம்மசந்திரம், நெரிகம், சின்னார், மேலுமலை, சூளகிரி உள்பட பல பகுதியில் இருந்து வந்தனர்.
நேற்று கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் சுவாமி தரிசனம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.