உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள திருவயலூர் பகுதியில் மழையால் சேதமடைந்து மண் சுவர் வீடு இடிந்து விழுந்தது.வீட்டை இழந்த பெண்மணிக்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் நிவாரணம் வழங்கிய போது எடுத்த படம்.

போச்சம்பள்ளி அருகே மழை காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதம்

Published On 2022-08-29 14:49 IST   |   Update On 2022-08-29 14:49:00 IST
  • ஓட்டு வீடு முழுவதும் சரிந்து விழுந்தது. முத்துவேடி அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் பிழைத்தார்.
  • வீட்டில் இருந்த டி.வி, பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமானது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேடி (வயது 37). கணவரை பிரிந்து தனது மகள் கோபிகாவுடன் வசித்து வருகிறார்.

12-ம் வகுப்பு படிக்கும் கோபிகா தனது பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று மதியம் சமைத்துவிட்டு சமையலறையில் முத்துவேடி உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த வேலையில் ஓட்டின் ஒரு பகுதி உடைந்து இவரது மேல் விழுந்துள்ளது.

விழுந்த வேகத்தில் சாப்பாட்டை வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது ஓட்டு வீடு முழுவதும் சரிந்து விழுந்தது. முத்துவேடி அதிர்ஷ்ட்ட வசமாக உயிர் பிழைத்தார்.

வீட்டில் இருந்த டி.வி, பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமானது. கணவர் கைவிட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக கூலி வேலை செய்து தனது மகளை காப்பாற்றி வரும் முத்துவேடிக்கு தங்க வீடில்லை என்ற நிலையில் அரசு வீடு கட்ட உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் அரசி, பருப்பு உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.3000-த்தை கொடுத்து, இலவச வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிய ளித்தார்.

Tags:    

Similar News