உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள கோட்டானூர் பகுதியில் இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி.

போச்சம்பள்ளி அருகே இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று

Published On 2022-08-28 14:07 IST   |   Update On 2022-08-28 14:07:00 IST
  • பசுமாடு கடா கன்றுகுட்டியை ஈன்றது.
  • அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கோட்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62).

விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து அதில் இரண்டு பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் பசுமாடு கடா கன்றுகுட்டியை ஈன்றது. குட்டி வெளியேறி சில நிமிடங்களில் உயிரிழந்தது. இதையடுத்து பசு மீண்டும் பிரசவ வலியால் துடித்தது.

மீண்டும் ஒரு கடா கன்று குட்டியை ஈன்றது. இக்கன்றுகுட்டிக்கு இரண்டு தலைகள் இருந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

பின்னர் சில நிமிடங்களில் அந்த குட்டியும் உயிரிழந்தது. இரண்டு தலையுடன் கூடிய கன்று குட்டியை அக்கம்பக்கத்தினர் ஆர்வத்துடன் வந்து பார்த்துவிட்டு சென்றனர். பின்னர் இரு கன்றுகளையும் அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News