பர்கூர் அருகே மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பு
- தங்கையின் வீட்டுக்கு வந்த மசூத் கான் , பானுமதி தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார்.
- வீட்டுக்குள் புகுந்த மசூத் கான் கத்தியால் அவரை குத்தி காயப்படுத்திவிட்டு பானுமதி அணிந்திருந்த சுமார் இரண்டரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள மல்லப்பாடி பகுதியை சேர்ந்தவர் பானுமதி (வயது 65). இவரது கணவர் ராமதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டார்.
ஒரே மகளும் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார். எனவே பானுமதி மட்டும் மல்லப்பாடியில் குடியிருந்து வருகிறார். பானுமதியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் யாஸ்மின்.
இவரது சகோதரர் மசூத் கான் (35). பெங்களூருவில் ஆட்டோ ஒட்டி வருகிறார். தனது தங்கையின் வீட்டுக்கு வந்த மசூத் கான் , பானுமதி தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து பானுமதியின் வீட்டுக்குள் புகுந்த மசூத் கான் கத்தியால் அவரை குத்தி காயப்படுத்திவிட்டு பானுமதி அணிந்திருந்த சுமார் இரண்டரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
கத்தி குத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள பானுமதி தந்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் மசூத் கானை தேடி வருகின்றனர்.