உள்ளூர் செய்திகள்

மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரையும் படத்தில் காணலாம்.

அஞ்செட்டி அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 4 பேர் சிறையில் அடைப்பு

Published On 2022-08-21 14:24 IST   |   Update On 2022-08-21 14:24:00 IST
  • கடுகநத்தம் பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • கடுக நந்தம் கிராமத்தை சேர்ந்த குமார் உள்பட 4 பேரும் கர்நாடக மாநிலத்தில் வாங்கி வந்து விற்ற 4 பேரை கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த மாவணட்டி மற்றும் கடுகநத்தம் பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அஞ்செட்டி போலிஸ் சப்-இன்ஸ்பக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சாமன்னா, சுப்பிரமணி, நாதன் ஆகியோருடம் கடுக நந்தம் கிராமத்தை சேர்ந்த குமார் உள்பட 4 பேரும் கர்நாடக மாநிலத்தில் வாங்கிய மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அஞ்செட்டி போலீசார் 4 நபர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேைரயும் ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News