உள்ளூர் செய்திகள்
விழாவில் கலந்து கொண்டவர்கள்.
திருச்செங்கோட்டில் தேசிய அறிவியல் தினம்
- திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
- முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.