உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை நடந்தபோது எடுத்த படம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

Published On 2023-03-02 12:33 IST   |   Update On 2023-03-02 12:33:00 IST
  • கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
  • தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் ஐ.இ.(ஐ), ஸ்கேன் ஆகிய துறை சார்ந்த கழகங்களின் சார்பில், 'ஜாவா மென்பொருளை பயன்படுத்தி எந்திரவழி கற்றல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். இணை பேராசிரியர் கேசவராஜா வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் செயல்திட்ட பணி, அதன் முக்கியத்துவம் மற்றும் எந்திரவழி கற்றல், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி இனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, பவானி மற்றும் கணினிதுறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News