பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 75-வது சுதந்திர தினம் என்ற வடிவில் நின்று மாணவர்கள் காண்பித்த காட்சி.
அனைத்து மாணவர்களுக்கும் தேசியக்கொடி
- தேசியக்கொடியின் சிறப்பு அதை பயன்படுத்தும் முறைகளை விளக்கி 75 வது சுதந்திரநாள்விழா தொடங்கி வைக்கப்பட்டது.
- தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கி அனைவருக்கும் தேசிய கொடிகளை ஆசிரியர் தாமோதரன் வழங்கினார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 120 மாணவர்களுக்கும் வீடுகளில் தேசியக்கொடியேற்ற கொடி வழங்கப்பட்டது.
தேசியக்கொடியின் சிறப்பு அதை பயன்படுத்தும் முறைகளை விளக்கி 75 வது சுதந்திரநாள்விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கி அனைவருக்கும் தேசிய கொடிகளை ஆசிரியர் தாமோதரன் வழங்கினார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜவஹர், ஜான்மா, சுரேஷ், ரமேஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி புஷ்பராணி, சத்துணவுப் பணியாளர்கள் சின்னபாப்பா, ஜெமினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.