உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்நிறுத்தம்
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பரமத்திவேலூர் பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளை யம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சி பாளையம், ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.