உள்ளூர் செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதாந்திர உதவி தொகைக்கான ஆணையை கலெக்டர் உமா வழங்கிய காட்சி.

நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-05-23 14:34 IST   |   Update On 2023-05-23 14:34:00 IST
  • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் உமா மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் முதி யோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 230 மனுக்களை கலெக்டர் உமாவிடம் வழங்கினார்கள். மனுக்க ளைப் பெற்று கொண்ட கலெக்டர் உமா மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் வட்டம், வடகரை யாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரப்பாளையம் பகுதியை சேர்ந்த நித்யா 11.03.2023 அன்று மர்மமான முறையில் இறந்ததையடுத்து, சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அவரது குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ.4 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை யினை அவரது மகள் தனுஷ் ஶ்ரீ க்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வழங்கு வதற்கான ஆணையினை கலெக்டர் உமா வழங்கினார்.

மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.3,800 மதிப்பில் 10 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு கோல்களும், ரூ.1,500 மதிப்பில் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்புக் கண்ணாடிகளும், ரூ.7,340 மதிப்பில் 4 மாற்றுத்திற னாளிகளுக்கு பிரெய்லி வாட்ச்களும், ரூ.9,050 மதிப்பில் 1 மாற்றுத்திறனா ளிக்கு மூன்று சக்கர வண்டி யும், ரூ.600 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோல் என 26 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.22,290 மதிப்பில் நலத்திட்ட உதவி களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுலவர் மணி மேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News