உள்ளூர் செய்திகள்

நாமக்கல் நரசிம்மர் கோவில் பங்குனி தேர்த் திருவிழாதொடக்கம்

Published On 2023-03-29 15:12 IST   |   Update On 2023-03-29 15:12:00 IST
  • பிரசித்தி பெற்ற நரசிம்மர் சாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
  • இன்று காலை 11 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாமக்கல்:

நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் சாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.

இதயொட்டி இன்று காலை 11 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 6-ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நரசிம்மர் சாமி உடனுறை நாமகிரி தாயார் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளன.

இன்று முதல் தேர்த் திருவிழா வரை இரவு நேரத்தில் பலவித சிறப்பு வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடை பெறு கின்றன.

வருகிற 4-ந் தேதி நரசிம்மர்-நாமகிரி தாயார் திருக்கல்யாணம், நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் கோவில் அதிகாரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News