உள்ளூர் செய்திகள்
முன்விரோத தகராறில் அடிதடி; வாலிபர் கைது
- நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக் இவரது மகன் தினேஷ் முன்விரோதம் இருந்து வந்தது.
- தீபக் மற்றும் அவரது நண்பரான பவித்திரத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கியதாக தெரிகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் தினேஷ் (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தினேஷ் அம்பாயிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபக் மற்றும் அவரது நண்பரான பவித்திரத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.