உள்ளூர் செய்திகள்

கருப்பண்ண சாமி கோவிலில் 18 அடி உயர அரிவாள் வைத்து சிறப்பு பூஜை

Published On 2023-08-25 08:29 GMT   |   Update On 2023-08-25 08:29 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கருப்பண்ண சாமி மற்றும் 18 அடி உயரமுள்ள அரிவாள் ஆகியவற்றிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News