உள்ளூர் செய்திகள்

ரூ.1.50 கோடிக்கு மஞ்சள் ஏலம்

Published On 2023-08-21 08:15 GMT   |   Update On 2023-08-21 08:15 GMT
  • கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
  • மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10622 முதல்ரூ.17042 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10558 முதல் ரூ.15212 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.12199 முதல் ரூ 15022 வரையிலும் விலை போனது.மொத்தம் 1800 மூட்டைகள் ரூ.1கோடியே 50லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News