உள்ளூர் செய்திகள்
வெப்படை போலீஸ் நிலையம் பின்புறத்தில்மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்
- வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வெப்படை போலீஸ் நிலையம் உள்ளது.
- இந்த போலீஸ் நிலையம் பின்புறம் முட்புதரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வெப்படை போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் பின்புறம் முட்புதரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த வெப்படை போலீசார் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்பெண் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்த கிடந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கும். இறந்தவர் யார்?, எந்த ஊர், பெயர் போன்ற விபரங்கள் தெரியவில்லை.
உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.