அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கநாளை மறுநாள் கடைசி நாள்
- அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி தேதி ஆகும்.
- இதற்கான எழுத்துத் தேர்வு 13.10.2023 முதல் நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும்.
நாமக்கல்:
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி தேதி ஆகும். இதற்கான எழுத்துத் தேர்வு 13.10.2023 முதல் நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவை பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் . நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் பங்குபெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.