உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையம் அருகே ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு

Published On 2023-06-06 13:01 IST   |   Update On 2023-06-06 13:01:00 IST
  • ஆவராங்காடு பகுதியில் ஒரே வளாகத்தில் 4 ரேஷன் கடைகள் செயல்படுகிறது.
  • இந்த ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர்.

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஆவராங்காடு பகுதியில் ஒரே வளாகத்தில் 4 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர்.

குறிப்பாக கோதுமையை வாங்கி மாவாக அரைத்து மக்கள் முழுமையாக பயன்படுத்துகின்றனர். இதனால் கோதுமையை மாதந்தோரும் வாங்கிவிடுவர்கள்.

கடந்த ஒரிரு மாதங்களாக கோதுமை கிடைப்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அகில பாரத கிரகப் பஞ்சாயத்தின் நிர்வாகி சபரிநாதன் கூறியதாவது:-

பள்ளிபாளையம் ரேஷன் கடைகளில் சில மாதங்களாக முக்கிய பொருளான கோதுமை வழங்கப்படுவது இல்லை. இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, தற்போது 20 சதவீதம் மட்டுமே கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆதனால் தான் முழுமையாக வழங்கபட முடியவில்லை என, தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய மக்கள், ரேஷன் பொருட்கள் நம்பி தான் உள்ளார்கள். சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உடனடி யாக பொதுமக்களுக்கு, பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News