குப்புச்சிபாளையம் குச்சிக்காட்டில் இரட்டை கொலை நடந்த வீட்டிற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும்காங்கிரஸ் கட்சி தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்து கொள்ள வேண்டும்
- குச்சிக்காடு என்ற பகுதியில் கடந்த 12-ந் தேதி வயதான விவசாய தம்பதியினரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் குப்புச்சிபாளையம் அருகே குச்சிக்காடு என்ற பகுதியில் கடந்த 12-ந் தேதி வயதான விவசாய தம்பதியினரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.
இந்தநிலையில் என் மண் என் மக்கள் நடைபயணத்திற்காக நேற்று பரமத்திவேலூர் வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது இது போன்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுத்து நிறுத்த தொடர்ந்து தமிழ்நாடு போலீசாரிடம் தான் பேச உள்ளதாகவும் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
குற்ற சம்பவங்கள்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய பண்ணை வீடுகளில் தனியாக தங்கி இருக்கும் வயதான தம்பதியரை கொன்று விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மன்னிப்பே கிடையாது. பரமத்திவேலூர் இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் நடக்கும் முன்பாகவே அவற்றை தடுத்து நிறுத்த முடியும்.
நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி மீதும், போலீசார் மீதும் தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த மாவட்ட கலெக்டரின் பேச்சைக் கூட கேட்காமல் தி.மு.க.வினர் அராஜக போக்கில் ஈடுபட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பீட் சிஸ்டம்
தமிழ்நாடு காவல்துறை குற்றச்சம்ப வங்களை தடுக்கும் பணிகளில் அதிக முக்கி யத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தமிழகத்தின் பழங்கால காவல்துறை போல பீட் சிஸ்டம் கிராமப்புற பகுதிகளிலும் அமைக்க வேண்டும். மிகுந்த கவனமுடன் குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாகவே அது குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும். போலீஸ் துறையில் உரிய பணியிடங்களை நிரப்பி குறைபாடுகளை நீக்கி குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே அவற்றை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிப்காட்
தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பெருந்துறை சிப்காட் பகுதியில் நச்சுக் கழிவுகள் அதிகமாக பரவி விவசாய நிலங்கள் பாதிக்கப்ப டுகின்றன. நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதிகளிலும் சிப்காட் அமைக்க உள்ளதாக அறிகிறோம். விவசாய நிலங்கள், பொதுமக்களை பாதிக்காத வகையில் இது போன்ற தொழிற்சாலை களையும் சிப்காட்டு களையும் அமைக்கலாம். அதற்கு பாஜக எந்த தடையும் தெரிவிக்காது. எங்களுடைய விவசாய அணி இது போன்ற பிரச்சனை உள்ள இடங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து உண்மை நிலையை அறிந்து செயல்பட்டு வருகிறோம்.
அரசியல் நாடகம்
உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீதான தமிழ்நாடு அரசின் வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உயர்கல்வி மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. வேந்தர் நியமித்தல், சித்தா பல்கலைக்கழகம் தனித் தேர்வு போன்ற உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால்தான் தமிழ்நாடு ஆளுநர் அவரது நிலைப்பாட்டில் உள்ளார்.
ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக எதையும் செய்யமாட்டார். ஆனால் தி.மு.க. அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் ஆதாயம் பெற இதுபோன்று நடக்கிறது. என்மீதும் வழக்கு தொடர ஆளுநர் பெயரில் அட்வகேட் ஜெனரல் அனுமதி அளிப்பது போல பல அரசியல் நாடகங்களை தி.மு.க. நடத்தி வருகிறது.
வெளிப்படை தன்மை
அதேபோல தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்திற்கு உயர் பதவிக்கான பணியிடங்களை நியமிக்கும் போது வெளிப்படை தன்மை யோடு அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சரும் பிற அமைச்சர்களும் தமிழக மக்களை குழப்பி வருகிறார்கள்.
தொடர்ந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டை எதிரிபோல பார்க்கிறது என்ற அமைச்சர் துரைமுருகனின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அந்த கூட்டணியில் எந்த விதமான கொள்கை சம்பந்தங்களும் இல்லாத கட்சிகள் உள்ளன. காவிரி நதிநீர் பங்கீட்டில் காங்கிரசும் தி.மு.க.வும் அரசியல் நாடகம் நடத்துவதை போலத்தான், இந்தியா கூட்டணியும் இருக்கிறது.
எனவே கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்குச்சிக்காடு என்ற பகுதியில் கடந்த 12-ந் தேதி வயதான விவசாய தம்பதியினரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர்.