உள்ளூர் செய்திகள்
பட்டா வழங்கக்கோரி நெசவாளர்கள் மனு
- சோழசிராமணியில் 150 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி கடந்த 3 தலைமுறையாக 700 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் 150 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி கடந்த 3 தலைமுறையாக 700 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உற்பத்தி ஆகும் வேஷ்டி, துண்டு, சேலைகள் கோ ஆப்டெஸ்க்கு அனுப்பட்டு வருகின்றன.
இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பாவடி முத்துகுமாரசாமி கோவில் இடத்தில் நூலை காய வைத்து பதனிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் நிரந்தரமாக நெசவு தொழில் செய்ய அரசு உரிய பட்டா வழங்கக் கோரி நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.