உள்ளூர் செய்திகள்

வீரணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலைய கிராம அடிப்படைப் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

வீரணாம்பாளையம் கிராமத்தில்உழவர் பயிற்சி முகாம்

Published On 2023-09-27 09:36 GMT   |   Update On 2023-09-27 09:36 GMT
  • பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
  • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.

இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.

Tags:    

Similar News