பெண்கள் முளைப்பாரி தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற காட்சி.
ராசிபுரத்தில் செவ்வாடை அணிந்து பெண்கள் முளைப்பாரி தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்
- பருவமழை தவறாது பெய்ய வேண்டும், தொழில் கல்வி வளம் பெறுக வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
- ஊர்வலத்தில் ஆதிபராசக்தி உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பருவமழை தவறாது பெய்ய வேண்டும், தொழில் கல்வி வளம் பெறுக வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம்
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசித்து விட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவரை தெரு, கடைவீதி வழியாக மேட்டு தெருவில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மகளிர் மன்றத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் ஆதிபராசக்தி உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்துக்கு நாமக்கல் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேள்விக்குழு பிரச்சாரக் குழு இளைஞர் அணியினர் செவ்வாடை அணிந்த பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.