உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

ஓட்டல்கள், பாஸ்ட்புட் உணவு கடைகளில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை

Published On 2023-09-13 07:25 GMT   |   Update On 2023-09-13 07:25 GMT
  • தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
  • ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்களில் உணவு தயாரித்து விற்பது தெரியவந்தது.

இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து ரூ.2 ஆயி ரம் அபராதம் விதித்தார்.

மேலும் உணவு பாது காப்பு விதிமுறைப்படி உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என ஓட்டல் கடை மற்றும் பாஸ்ட் புட் உணவு தயாரிக்கும் கடை உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதி களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாது காப்பு துறை அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News