உள்ளூர் செய்திகள்

வீட்டின் முன்பு மரம் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

குமாரபாளையத்தில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை

Published On 2023-06-05 12:21 IST   |   Update On 2023-06-05 12:21:00 IST
  • குமாரபாளையத்தில் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறா வளி காற்றுடன் இடி மின்ன லுடன் கனமழை பெய்தது.
  • பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறா வளி காற்றுடன் இடி மின்ன லுடன் கனமழை பெய்தது. இதில் நகரில் காவேரி நகர், பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை, சேலம் சாலை, பெராந்தர்காடு, கிழக்கு காலனி, நாராயண நகர் உள்ளிட்ட பல இடங்க ளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

சேலம் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெ டுத்து ஓடியது.

சாலையின் இருபுறமும் புதிய வடிகால் அமைத்தும், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகனம் போக்குவரத்து தடைபட்டது. மழை நின்று தண்ணீர் வடிந்த பின் வாகனங்கள் சென்றன.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று, சாய்ந்த மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுத்தார். நகராட்சி தூய்மை பணியாளர்கள் மரங்கள் சாய்ந்த இடங்களில் சென்று மரங்களை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழி ஏற்படுத்தினர்.

இரவில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது. மழை நின்ற பின் மின்வாரிய பணியா ளர்கள் இரவு என்று பாரா மல், மின் கம்பிகளை சரி செய்தனர்.

Tags:    

Similar News