உள்ளூர் செய்திகள்

குருபூர்ணிமாவை ஒட்டி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது எடுத்து படம்.

தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா

Published On 2023-07-05 12:49 IST   |   Update On 2023-07-05 12:49:00 IST
  • தொட்டிப் பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் 3 ஆண்டு களுக்கு பிறகு குருபூர்ணிமா விழா நடைபெற்றது.
  • விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் ஆரத்தியும், 7 மணிக்கு சர்வ சித்தி சங்கல்ப பூஜை, நாம பூஜை‌ மற்றும் பாராயணம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே தொட்டிப் பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் 3 ஆண்டு களுக்கு பிறகு குருபூர்ணிமா விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் ஆரத்தியும், 7 மணிக்கு சர்வ சித்தி சங்கல்ப பூஜை, நாம பூஜை மற்றும் பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார, ஆராதனையும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் ஆரத்தி நடைபெற்றது. மாலை 7 மணிக்கு ஆரத்தி மற்றும் பூஜைகளும் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல், கீரம்பூர், பரமத்தி வேலூர் சுற்றுவட்டப் பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான சாய்பாபா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் தபோவன சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News