உள்ளூர் செய்திகள்

பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்குமானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

Published On 2023-07-15 14:58 IST   |   Update On 2023-07-15 14:58:00 IST
  • ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.
  • மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், பெருங்குறிச்சி ஊராட்சிக் குட்பட்ட கருந்தேவன்பா ளையம் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் மானாவாரியில் ஒருங்கி ணைந்த பண்ணைய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா மணி தலைமையில் நடைபெற்றது.

மானாவாரியில் பயிர் சாகுபடியுடன் விவசாயிகள் இதர வருவாய் ஈட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். திருச்சி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின், மானாவாரி சாகுபடியின் அங்கங்களான பயிர் சாகுபடி முறைகள், இயற்கை உரம் தயார் செய் தல் குறித்தும், திருச்செங் கோடு கால்நடை உதவி இயக்குனர் அருண்பாலாஜி பயிர் சாகுபடியில் கால்நடை வளர்ப்பின் பங்கு குறித்தும், பெருங்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் கிரி கால்நடை பண்ணை மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

கபிலர்மலை வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஊட்டம் நிறைந்த தானியங்களின் சாகுபடி குறித்தும், கபிலர் மலை வட்டார வேளாண்மை துணை அலுவலர் சக்திவேல், மயில் விரட்டி தெளிப்பு குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலா ளர் ஜோதிமணி உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News