உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்ட முதியவர் பலி

Published On 2023-06-07 13:03 IST   |   Update On 2023-06-07 13:03:00 IST
  • சுந்தரம் (வயது 60). இவர் மன வியாதிக்காக தினசரி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
  • சுந்தரம் தான் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு விட்டார். இதன் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவர் மன வியாதிக்காக தினசரி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் சுந்தரம் தான் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு விட்டார். இதன் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News