உள்ளூர் செய்திகள்

பெரியூர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு

Published On 2023-10-24 10:11 GMT   |   Update On 2023-10-24 10:11 GMT
  • இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதியதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் உள்ளது.
  • கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில், பெரியூர் உள்ளது. இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதியதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் உள்ளது. பெரியூரின் மத்திய பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் போன்றவை அமைந்துள்ள 4 ரோடு பகுதி உள்ளது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பெரியூர் நான்கு ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டிலும், நத்தமேடு செல்லும் ரோட்டிலும், குடிநீர் பைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

ஊரின் மத்தியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News