உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏலம் மார்க்கெட்டில் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த போது எடுத்த படம்.

பரமத்தி வேலூர் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

Published On 2023-06-07 07:25 GMT   |   Update On 2023-06-07 07:25 GMT
  • பரமத்திவேலுார் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
  • வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், அண்ணா நகர், செல்லப்பம் பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன்

உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வாழைத்தார் வெட்டும் தருவாயில் வரும்போது கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் நடைபெற்று வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற் பனை செய்து வரு கின்றனர்.

வாழைத்தார்களை ஏலம் எடுத்து செல்வதற்காக நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

வாங்கிய வாழைத் தார்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங் களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கு விற்றது, தற்போது அதிகபட்சமாக, ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்ற, ரஸ்தாளி தார், தற்போது, ரூ.250-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்றது நேற்று ரூ.200-க்கும், ரூ.250-க்கு விற்ற பச்சநாடன் வாழைத்தார் தற்பொழுது ரூ ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று, ரூ.5 விற்ற நிலையில், தற்போது, ரூ.3-யாக குறைந்துள்ளது.

வரத்து அதிகமானதும், மேலும் வெயில் காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் வாழைப்பழம் தோல்கள் கருப்பாக மாறிவிடுவதும் இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News