உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி சார்பில் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

பரமத்திவேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு

Published On 2023-09-20 07:37 GMT   |   Update On 2023-09-20 07:37 GMT
  • விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
  • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பரமத்திவேலூர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

ஆய்வு

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள காத்தாக்கண்டர் கடைவீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, சந்தை பகுதி, பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை, காவிரி சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

600 போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலை மையில் சுமார் 600- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.

Tags:    

Similar News