உள்ளூர் செய்திகள்
மணியனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
- பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மணியனூர் பகுதிகளைச் சேர்ந்த சண்முகம் (33), ரங்கநாதன் (35), சக்திவேல் (42), கோபிநாத் (34), லோகநாதன் (44), சந்திரன்( 45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஆயிரத்து 200 ரூபாைய பறிமுதல் செய்தனர்.